உக்ரைன்-ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கடந்த 2 மாதத்துக்கும் மேலாக போர் நடந்துவருகிறது. ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியதில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
7.5.2022
09.16: மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு, உக்ரைன் படையினர் ரஷியாவை எதிர்த்து போராடி வருகின்றனர். உக்ரைன் வடகிழக்கு பகுதியில் இருந்த 2 முக்கிய நகரங்களில் இருந்து ரஷிய படைகளை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைன் கிழக்கு பகுதியை கட்டுக்குள் கொண்டு வர ரஷியா தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
06.40: ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். உக்ரைன் அரசாங்கத்திற்கு 150 மில்லியன் டாலர்கள் நிதி உதவியாக வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கி குண்டுகள், ரேடார்கள் மற்றும் பிற உபகரணங்களை வழங்கும் பாதுகாப்பு உதவியின் மற்றொரு தொகுப்பை நான் அறிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
03.30: உக்ரைனின் மரியுபோல் நகர் மீது ரஷியா பார்வையை பதித்தது. போர் தொடுத்த நாள் முதல் அங்கு முற்றுகையிட்டது. அந்நகரின் மீது ஏவுகணை தாக்குதலும், குண்டுவீச்சும் நடத்தி பெரும்பாலான கட்டிடங்களை சேதப்படுத்தி உருக்குலைய வைத்தது.
உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறுகையில், மரியுபோலில் உள்ள அஜோவ்டஸ் உருக்கு ஆலையில் இருந்து மேலும் 50 பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.
00.45: உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில். ஐரோப்பிய யூனியன் தலைவர் ச் கூறுகையில், ஐரோப்பிய யூனியன் தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை ஏலத்தில் விட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனால் திரட்டப்படும் நிதியை பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். மரியுபோல், லவீவ், கீவ் உள்ளிட்ட நகரங்களை மறுசீரமைக்க இந்த நிதி உதவும் என கூறியுள்ளார்.