60 வருடங்களுக்கு தேவையான எரிபொருள் தமிழர் பகுதியில் கண்டுபிடிப்பு

153 0

இலங்கை கடற்பரப்பில் கிடைத்த கனிய வளத்தை கொண்டு நாட்டுக்கு தேவையான எரிபொருளை 60 வருடங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும் இது குறித்து முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படாமை பற்றி நாடாளுமன்றத்தில் கோப்பா குழு கவனம் செலுத்தியுள்ளது.

மன்னார் கடல்படுகையில் காணப்படும் எரிபொருள், இயற்கை வாயு என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய கனிய வளம் கிடைத்துள்ளது.

மன்னார் கடல்படுகையில் ஐந்து பில்லியன் பீப்பா அளவிலான எரிபொருள் காணப்படுவதாக 2016ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அரசாங்க கணக்கு குழு அறிவித்திருந்தது.

 

இதில் 5 ட்ரில்லியன் கன அடி இயற்கை வாயு காணப்படுகின்றமையும் தெரியவந்துள்ளது.

 

நாட்டின் 60 வருட எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய இவை உதவும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்திருக்கிறது.

 

செயற்கை வாயுவின் மூலம் மாத்திரம் 25 வருடங்களில் 200 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.

ஆனால் இவற்றைப் பெற்று வர்த்தக ரீதியான வருமானத்தை ஈட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படாமை பற்றி தொடர்ந்தும் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery