அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் இன்று எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் தலவாக்கலை நகரிலும் பிரதேச மக்களால் அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்று ; இன்று (6) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் தலவாக்கலை நகர வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.