இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை கிரீஸ் மற்றும் லெபனானை விட மோசமாக உள்ளது என நிதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி, நிதித்துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக அரச வங்கிகளின் தலைவர்களுடனான சந்திப்பில் உரையாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி யோசிப்பது கூட கடினமாக இருப்பதாக அரச வங்கி தலைவர்களிடம் கூறியுள்ள சப்ரி, நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷவும், அஜித் நிவார்ட் கப்ராலும் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லையெனவும் தெரிவித்தார்.
அதன்படி, எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.