அனைத்து அரசியல் கட்சிகளும் உற்றுநோக்கும் வணிகர் சங்க மாநாடு- விக்கிரமராஜா பேச்சு

145 0

கொரோனா பெருந்தொற்று மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த சங்க நிர்வாகிகளுக்கு மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

திருச்சியில் இன்று நடைபெற்ற வணிகர் விடியல் மாநாட்டை, தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தொடங்கி வைத்து பேசியதாவது:
39வது வணிகர் சங்க மாநில மாநாடு இன்று கோலாகலமாகவும், எழுச்சியுடனும் நடைபெறுகிறது. கடந்த 38 ஆண்டுகளாக இந்த சங்கத்திற்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் உழைத்தவர்களுக்கு இன்று பல சலுகைகள் கிடைக்க இருக்கிறது.
இந்த மாநாட்டை பார்க்கும்போது வணிகர்களுக்கே சற்று வித்தியாசமானதாக இருக்கும். காரணம் முதன் முதலாக இந்த வணிகர் சங்க மாநாட்டில் முதல்அமைச்சர் கலந்துகொள்கிறார்.
அதனால் பல்வேறு அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த மாநாட்டை உற்று நோக்கி வருகிறது. ஜாதி, மத, அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில், கொரோனா பெருந்தொற்று மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த சங்க நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக புதுக்கோட்டை தொழில் வர்த்தக சங்கத் தலைவர் சீனு சின்னப்பா, கே.டி.கேசவன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.