கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அதற்கான விலையை கொடுத்தே தீரவேண்டும் என இஸ்ரேல் அதிபர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், டெல் அவிவ் நகரில் பெரும் திரளாக கூடியிருந்த கூட்டத்தில் மர்ம நபர்கள் 2 பேர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கத்தியால் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் கூறுகையில், பயங்கரவாதிகள் மீதும், அவர்களுக்கு ஆதரவான சூழலிலும் கை வைப்போம். அதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்கள் என தெரிவித்தார்.