ஒருசில மாற்றங்களுடன் முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளோம் – சபை முதல்வர் தினேஷ் குணவர்தன

204 0

பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்து மக்கள் கோரும் ஒருசில மாற்றங்களுடன்  ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தீர்மானங்களுக்கமைய முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளோம் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிடிய  தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆளும் தரப்பினர் என்ற அடிப்படையில் அதிகூடிய வாக்கு வித்தியாசத்தில்  புதிய  பிரதி சபாநாயகரை தெரிவு செய்துள்ளோம். புதிய  பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரஞ்சித் சியம்பலாபிடியவிற்கு ஜனாதிபதி ,பிரதமர் உட்பட அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

மேன்மைபொருந்திய பிரதி சபாநாயகர் பதவிக்கு கட்சி மட்டத்தில் எவரும் தெரிவு செய்யப்படுவதில்லை. பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு அமையவே பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறுகிறது.

கடந்த காலங்களில் ஆளும் மற்றும் எதிர்ககட்சியின் உறுப்பினர்கள் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
<p>ஜனநாயக முறைமையிலான வாக்கு முறைமையில் வெற்றி,தோல்வி ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிக தரப்பினரால் விரும்பப்படுவர் வெற்றிப்பெறுவர், விரும்பியோ, விருப்பமில்லாமலோ, குறைந்த வாக்குகளை பெறுபவர் தோல்வியடைவார்.

பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்து நாட்டு மக்கள் கோரும் ஒரு சில மாற்றங்களுக்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னெடுத்துள்ள&nbsp; தீர்மானங்களுக்கமைய முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளோம் என்றார்.