அரசாங்கத்திலுள்ளவர்களுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் தயாரில்லை – சரத் பொன்சேகா

172 0

அரசாங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களுடன் இணைந்துகொண்டு இடைக்கால அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார் இல்லை.

அவ்வாறு இடம்பெற்றால் அது புதிய போத்தலில் பழைய சாராயம் போன்றாகும்.

அதேபோன்று ஜனாதிபதி, பிரதமரை நீக்கிவிட்டு இடைக்கால அரசாங்கம் அமைத்தாலும் இதனை செய்ய முடியாதது.

ஏனெனில் ஜோன்ஸ்டன், மஹிந்தானந்தவை ஜனாதிபதி, பிரதமராக்கினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்கள் போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதன் மூலம் அதனை இல்லாமலாக்கலாம் என சிலர் நினைக்கின்றனர்.
<p>ஆனால் அரசாங்கத்துக்கு எதிரான கோராட்டம் நாளுக்குநாள் தீவிரமாகும் என்றே நான் நினைக்கின்றேன்.
;
போராட்டக்காரர்கள் ஊழல் மோசடிகளை இல்லாமலாக்கவேண்டும் என்றே தெரிவிக்கின்றனர்.
அவர்களின் கோரிக்கையை அரசியல் யாப்பு திருத்தம் மேற்கொண்டு செய்ய முடியாது
இதற்காக அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.

அவ்வாறு இல்லாம் பதிவகளை மாற்றியோ இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தியோ இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என நான் நம்பப்போவதில்லை.

அத்துடன் ஜனாதிபதி பதிவியை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் பேசுபொருளாக மாறி இருக்கின்றது.
ஜனாதிபதி பதவியை இல்லாமலாக்குவதில்லை. பிரச்சினை இல்லை

என்றாலும் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும் வகையில் இதனை செய்யக்கூடாது.

ஜனாதிபதி பதவி இல்லாமல்போனால் அதன் அதிகாரம் பிரதமருக்கே வருகின்றது

ஜனாதிபதியை போன்று பிரதமருக்கு செயற்பட முடியாது ஏனெனில் பிரதமர் எப்போதும் தனது ஆசனத்தை பாதுகாத்துக்கொள்ளும் வகையிலே செயற்படுவார்.

விருப்பு வாக்கு முறையில் பிரதமருக்கு ஜனாதிபதியின் அதிகாரம் வழங்குவது பொருத்தம் இல்லை. அதனால் விருப்பு வாக்குமுறையை முற்றாக இல்லாமலாக்கவும் முடியாது.

ஏனெனில் பாராளுமன்றத்தில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும்.

அதனால் விருப்பு வாக்குமுறையையும் பாதுகாத்துக்கொண்டு பிரதமரையும் இதற்குள் கொண்டுவந்து, எப்படி நாட்டை பாதிகாத்துக்கொண்டு தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதென்று நாங்கள் சிந்திக்கவேண்டும்.

அத்துடன் அரசாங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களுடன் இணைந்துகொண்டு இடைக்கால அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார் இல்லை

அவ்வாறு இடம்பெற்றால் அது புதிய போத்தலில் பழைய சாராயம் போன்றாகும்.

அதேபோன்று ஜனாதிபதி, பிரதமரை நீக்கிவிட்டு இடைக்கால அரசாங்கம் அமைத்தாலும் இதனை செய்ய முடியாதது.

உதாரணத்துக்கு ஜோன்ஸ்டன் பெர்ணாந்துவை ஜனாதிபதியாக்கி, மஹிந்தானந்த அழுத்தககேவை பிரதமராக்கினால் மக்கள் போராட்டம் முடிவடையுமா.

;மக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா? அதனால் இதுதொடர்பாக சிந்திக்கவேண்டி இருக்கின்றது.
மேலும் பொலிஸார் மற்றும் ராணுவத்தினர் போராட்டக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தங்களின் கடமையை செய்யவேண்டும்.

நீங்கள் உங்கள் தொழிலை பாதுகாத்துக்கொள்ளவே இவ்வாறு செயற்படுகின்றனர் என்பதை நாங்கள் அறிகின்றோம்.

உங்களது தொழிலை ஒன்றும் செய்ய முடியாது.

அதுதொடர்பில் அச்சப்படத்தேவையில்லை

அவ்வாறு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை நாங்கள் மீண்டும் பெற்றுத்தருவோம்.

உங்களது எதிர்காலத்துக்காகவுமே போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர்.

அதனால் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்