சென்னையில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் இந்த வசதி பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகர பஸ்களில் ஜி.பி.எஸ். கருவி மூலம் அடுத்து வரும் பஸ் நிறுத்தம் குறித்த தகவல் தெரிவிக்கும் ‘வசதி’ அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் இந்த வசதி பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல பஸ்களில் குற்றங்கள் நடப்பதை தடுக்க கேமரா மற்றும் அவசர அழைப்பு பொத்தான் போன்ற வசதிகளும் அளிக்கப்பட உள்ளன.
சென்னையில் சுமார் 32 லட்சம் பேர் பஸ்களின் பயணம் செய்கின்றனர். தினமும் மாநகர பஸ்கள் வரும் நேரம், வழித்தடம், சென்றடையும் நேரம் போன்றவற்றை பயணிகள் தெரிந்துகொள்ள வசதியாக ‘Chennai bus’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3233 மாநகர பஸ்கள் 612 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்களின் இயக்கம் குறித்த தகவலை பொதுமக்கள் தெரிந்து கொள்ள இந்த வசதியை பயன்படுத்தலாம். இந்த செயலியை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த செயலியை தங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து இந்த வசதியை பயன்படுத்தலாம்.