அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

248 0

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், அந்நாட்டு அதிபர் பைடனை பல நாட்களாக சந்திக்கவில்லை என வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஏப்ரல் 30 அன்று செய்தியாளர்களுடன்ன விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவில் அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்து. இதையடுத்து அவர் தமது வீட்டில் தனிமைப்படுத்ததில் இருந்து வருகிறார்.  தமது  ஐரோப்பா மற்றும் மொராக்கோ பயணங்களை அவர் ஒத்தி வைத்தார்.
முன்னதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் வழிகாட்டுதல்களின்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, ஆண்டனி பிளிங்கன் கடந்த சில நாட்களாக சந்திக்கவில்லை என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசி போட்டுள்ள பிளிங்கன் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடப்பட்ட பிறகு தமது வழக்கமான பணிகள் மற்றும் பயணங்களை தொடங்குவார் என நெட் பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.