நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பெட்ரோலுக்காக பெரிய வரிசைகள் காணப்பட்டன.
இதேவேளை, இந்திய உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
“இலங்கை மக்களுக்கு இந்தியாவின் அர்ப்பணிப்பை வழங்குவதன் மூலம், 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் இன்று கொழும்பை அடைந்தது. இதன் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கை சுமார் 440,000 மெட்ரிக் தொன் எரிபொருளைப் பெற்றுள்ளது. என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.