நாட்டில் விலையேற்றம் காரணமாக பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 06 ஆம் திகதி நுவரெலியா நகரில் வியாபார ஸ்தலங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை நுவரெலியா வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் டக்லஸ் நானயக்கார மற்றும் பொருளாளர் வசீகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக அன்றையதினம் வியாபார ஸ்தலங்களை மூடி , கருப்புக் கொடி ஏற்றி வைத்து எதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டும்.
அத்தோடு வியாழக்கிழமை (05) ஆம் திகதி வியாபார நிலையத்தின் வாடிக்கையாளர் நலன் கருதி 6 ஆம் திகதி தமது வியாபார நிலையம் மூடப்பட்டுள்ளதென அறிவித்தல் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது