தனியார் நிதி ஆலோசனைக் குழுக்களைக் கலைக்கவும் – ரணில் விக்கிரமசிங்க

345 0

பண அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து தனியார் நிதி ஆலோசனைக் குழுக்கள் மற்றும் சபைகள் கலைக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல் கூட்டணிகள் எதுவாக இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், நிதி தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அதிகாரிகள் பாராளுமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொருளாதாரம் மற்றும் நாட்டின் நிதி தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ அறிக்கைகளையும் நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்திற்கு முன்பாகவோ அல்லது ஊடகவியலாளர் சந்திப்பிலோ வெளியிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

வரிகளை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என்பதை சேர்த்து முன்னோக்கி நகர்த்துவது குறித்து தீர்மானங்கள் எட்டப்பட வேண்டும்.

நாட்டின் வங்கி முறைமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், வங்கி அல்லது நிதி நிறுவனம் வீழ்ச்சியடைந்தால் அது மோசமான நிலைமைக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.