நிரந்தர காவலரண்களுடன் நாடாளுமன்றத்திற்கு தீவிர பாதுகாப்பு

239 0

இலங்கை நாடாளுமன்றப் பகுதியில் நிரந்தர காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்கிலேயே இந்த காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

காலிமுகத்திடல், அலரி மாளிகை வளாகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு தொடர்ச்சியாக கோரி வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே தற்போது நிரந்தர காவலரண்கள் அமைக்கப்பட்டு நாடாளுமன்றின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery