மக்கள் போராட்டத்தில் பிராந்திய சமூக ஆர்வலர்களை வேட்டையாடும் பொலிஸாரின் முயற்சிகளை முறியடிப்போம்

202 0

மக்கள் போராட்டத்தில் பிராந்திய சமூக ஆர்வலர்களை வேட்டையாடும் பொலிஸாரின் முயற்சிகளை முறியடிப்போம் என சுதந்திர ஊடகம் இயக்கமானது ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டாளர்களை பொலிஸார் கைது செய்து அச்சுறுத்திய இரண்டு சம்பவங்கள் தொடர்பாகச் சுதந்திர ஊடகம் இயக்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளதுடன் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டாமெனப் பொலிஸ்மா அதிபர் மற்றும் அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்கின்றோம் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஜனநாயக உரிமையை மீறும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை. இந்தச் சம்பவங்களை மிகவும் தீவிரமாகக் கவனம் செலுத்தும் சுதந்திர ஊடக இயக்கம், அதனை அறிக்கையிடவும் அதேபோலச் சட்ட சமூகத்துடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுதந்திர ஊடக இயக்கம் எந்நேரமும் தயாராக உள்ளது.

இது போன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் சுதந்திர ஊடக இயக்கத்திற்கு தகவல்களைப் பெற்றுத்தருமாறு கேட்டுகொள்கிறது எனவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Gallery