அனைத்து கிராம உத்தியோகத்தர்ளும் இன்று சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், கொழும்பு கோட்டை இரயில் நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்கவும் கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
மேலும், கிராம உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்ட பேரணியாக சென்று ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.