இலங்கையில் இன்று முதல் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொலைக்காட்சி, வானொலியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களும், தங்கள் செய்தி ஒலி, ஒளிபரபரப்பை தவிர்த்து ஏனைய சமகால நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் கலந்து கொள்வதனை நிறுத்தியுள்ளது.
அதற்கு பதிலாக தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தொடர்புடைய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ஒலி,ஒளி பரப்பாளர் மன்றம் தெரிவித்துள்ளது.
பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும் நடவடிக்கைகளுக்கே அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்னுரிமைய வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.