மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் இந்தியாவில் இருந்து மன்னாருக்கு

242 0

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நோய் பரப்பும் ‘அனோபிலிக்ஸ் ஸ்டிவன்ஸய்’ என்ற நுளம்பு இனம் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மலேரியா நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

மன்னார் – பேசாலை பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மலேரியா நோய் பரப்பும் இந்த நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

மலேரியா நோய் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த நுளம்பு இனம், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளதா? என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுவருவதாக மலேரியா நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.