இங்கிலாந்து மகளிர் கால்பந்தாட்ட அணியில் விளையாடிய முதலாவது இலங்கை வம்சாவளி வீராங்கனை |

285 0

அவுஸ்திரேலியாவின் டெண்டினொங் நகரில் பிறந்த ஜசின்தா கலபடஆராச்சி (20 வயது), கடந்த வருடம்  செல்டிக் கழக மகளிர் அணிக்காக ஸ்கொட்லாந்து மகளிர் பிறீமியர் லீக்கில் விளையாடுவதற்கு ஒப்பந்தமானார்.

அவுஸ்திரேலியாவின் 17 வயதுக்குட்பட்ட மற்றும் 20 வயதுக்குட்பட்ட கனிஷ்ட தேசிய அணிகளின் முன்னாள் வீராங்கனையான ஜசின்தா, தனது 15 ஆவது வயதில் மெல்பர்ன் சிட்டி கழகத்துக்காக முதன்முதலில் விளையாடினார்.

அதன் பின்னர் அலாமெய்ன் கழகம் (2018), பேர்த் குளோறி (2018-2019), வெஸ்ட் ஹாம் யுனைட்டட் (2019-2020), நேபோலி (2020-2021) ஆகிய கழகங்களுக்காக விளையாடியிருந்தார்.

இங்கிலாந்தில் மகளிர் கால்பந்தாட்டத்தில் விளையாடிய முதலாவது இலங்கை வம்சாவழி வீராங்கனை என்ற பெருமையும் ஜசின்தாவை சாருகிறது.

முன்கள வீராங்கனையான ஜசின்தாவின் தந்தை கலபடஆராச்சி இலங்கையராவார். அவரது தாயார் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்.