இராகலையில் இருந்து காலிமுகத்திடலை நோக்கிய நடைபயணம் வெற்றி

241 0

உடபுசல்லாவையைச் சேர்ந்த நடை வீரரான மணிவேல் சத்தியசீலன் கடந்த சனிக்கிழமை  காலை 09.30 மணியளவில் இராகலையில் இருந்து கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்தார்.

அவர், நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்னைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் , உரப்பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, எரிவாயு மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் இராகலை முருகன் ஆலயத்தில் மத வழிபாடுகளின் பின்னர் நுவரெலியா ; ஹட்டன், கினிகத்தனை, அவிசாவளை வழியாக கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள “கோட்டா கோகம” வை நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்தார்.

இவரின் நடைபயணத்தில் பிரதான நகரங்களில் மக்கள் அமோக வரவேற்பு வழங்கி உற்சாகப்படுத்தினார்கள்.
இவ்நடைபயணத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஹட்டனிலிருந்து  அவிசாவளை வரை தனது பயணத்தை ஆரம்பித்து திங்கட்கிழமையான நேற்று மாலை 5:10 ; மணியளவில் சத்தியசிலன் கொழும்பு காலிமுகத்திடக்கு சென்று எதிர்ப்பினை வெளிக்காட்டினார்.