யாழ். வேலணை, வென்புரி ஊடாக தமிழகம் செல்ல முயன்ற வவுனியாவைச் சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் இன்று அதிகாலை ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாகப் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்குச் செல்லும் அகதிகளது எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.