காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
குறித்த அலுவலகத்தில் சுயாதீனமாக செயல்பட அனுமதிக்கும் வகையில் போதுமான நிதியை அரசாங்கம் வழங்கவில்லை என அவர் கூறினார்.
மேலும் காணாமல் போனோர் அலுவலக விவகாரங்களில் சம்பந்தப்பட்ட அமைச்சு ஒன்று தலையிட்டு வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
2021 டிசம்பர் 13 ஆம் திகதி முதல் மூன்று வருடங்களுக்கு காணாமல் போனோர் அலுவலக ஆணையாளராக சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.