ஜனாதிபதிக்கு தவறான ஆலோசகர்கள் இருக்கின்றனர் – தயாசிறி

155 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தவறான ஆலோசகர்களை தெரிவு செய்தமையினால் நாடு நெருக்கடி நிலைக்கு சென்றது என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்ச தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருநாகலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர், ஜனாதிபதியின் ஆலோசகர்களாக எட்டாம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாதவர்களும் இருப்பதாக கூறினார்.

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும், பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீட்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

சஜித் பிரேமதாச கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவினை வழங்க தயாராக இருந்தாலும் அவர் ஆட்சியைப் பிடிப்பாரா என்பதை முதலில் அறிவிக்க வேண்டும் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

மேலும் நாட்டை எப்படி ஆள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால் மட்டுமே சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம் ஜனாதிபதி ராஜபக்ஷ இராஜினாமா செய்யும்வரை தீர்வுகளைப் பற்றி பேச மாட்டோம் என்றும் தேர்தலை நடத்துமாறும் அனுரகுமார திஸாநாயக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் பாடப் புத்தகங்களைக்கூட அச்சடிக்கக் காகிதம் இல்லாத நிலையில் வாக்குசீட்டை அச்சிட காகிதம் எங்கே கிடைக்கும் என்றும் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பினார்.