முதிர்ச்சியடையும் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொடர்புடைய நிதி நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் கலந்துரையாடல்களை சீனா தீவிரமாக ஆதரிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் நிதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது சீனத் தூதுவர் தெரிவித்தார்.
சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் எச்.இ.கியூ.சென்ஹோங் இன்று நிதியமைச்சகத்தில் நிதியமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரியை சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்பின் பகுதிகள் மற்றும் தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை நிர்வகிப்பதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கைக்கு சீனாவின் முழு ஆதரவையும் சீனத் தூதுவர் மீண்டும் வலியுறுத்தியதுடன், கடனை மறுசீரமைப்பதில் சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் இணைந்து பணியாற்றுவதற்கான இலங்கையின் முடிவை சீனா தெளிவாக ஆதரிக்கிறது என்பதையும் வலியுறுத்தினார்
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரர் என்ற வகையில், இலங்கையின் நிலைப்பாட்டை சாதகமாக பரிசீலித்து, கூடிய விரைவில் உடன்பாட்டை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை ஊக்குவிப்பதில் சீனா செயலூக்கமான பங்கை வகிக்க தயாராக இருப்பதாகவும் சீனத் தூதுவர் அமைச்சர் அலி சப்ரிக்கு உறுதியளித்தார்.
சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாட்டுப் பிரதமர்களுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற பயனுள்ள தொலைபேசி உரையாடல் குறித்து அவர் மேலும் பேசினார்.
இருதரப்புக் கடனை மறுசீரமைப்பது தொடர்பான கோரிக்கை தொடர்பில் குறிப்பிடுகையில், முதிர்ச்சியடையும் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொடர்புடைய நிதி நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் கலந்துரையாடல்களை சீனா தீவிரமாக ஆதரிக்கும் என்று சீனத் ; தூதுவர் மேலும் தெரிவித்தார்.