இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான தீர்க்கமான கலந்துரையாடல் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் மற்றும் அண்மையில் அரசாங்கத்தில் இருந்து தம்மை சுயாதீனமாக அறிவித்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இணங்குவதாகவும், அவ்வாறான அரசாங்கம் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதில் கருத்து இருப்பதாகவும் பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் இருந்து ஆதரவை விலக்கிக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது எதிர்பார்த்த முடிவுகளை ஏற்படுத்தாது என்றும் காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கையின் அரசியலமைப்பில் இடைக்கால அரசாங்கத்துக்கு இடமில்லை என்று கருத்தையும் காரியவசம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.