சமாதானமும் சக வாழ்வும் அபிவிருத்தியும் என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் செயலாளர் நாயகம் டாக்டர் தாலிப் றிபாய் தலைமையில் ஆரம்பமான மாநாடு நேற்று 11.07.2016 பாசிக்குடா அமாயா வில் ஆரம்பமானது.
சுற்றுலாத்துறை அமைச்சர்ஜோன் அமரதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இம்மாநாடு தொடர்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளதுடன் இன்றைய 12.07.2016 நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ, பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், கம்போடிய சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர், ஐரோப்பிய பாராளுமன்ர உறுப்பினர், ஜோர்தான் நாட்டின் இளவரசி, பங்களாதேஸ் பாராளுமன்ற உறுப்பினர், உலக நாடுகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டர்.
குறித்த இம்மாநாடு நாளையும், நாளை மருதினம் காலை வரை இடம்பெறவுள்ளமை குரிப்பிடத்தக்கது.