மாமல்லபுரத்தில் தயாரான 5 டன் பஞ்சலோக சரஸ்வதி சிலை

210 0

பஞ்சலோக சரஸ்வதி சிலையை வடிவமைக்கும் போதே ஆன்மீக உணர்வுகளை உணர்ந்ததாக சிற்பிகள் தெரிவித்தனர்.மாமல்லபுரம் அடுத்த வசந்தபுரியில் உள்ள சிற்பக்கூடத்தில் 5 டன் எடை உள்ள பஞ்சலோக “சோடசரஸ்வதி” சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.இதனை கடந்த ஒரு ஆண்டாக 60 சிற்பக்கலைஞர்கள் இணைந்து செய்து உள்ளனர். இந்த சரஸ்வதி பஞ்சலோக சிலைய 7அடி உயரம், 8 அடி அகலத்தில் கலைநயத்துடன் காணப்படுகிறது. சரஸ்வதி தேவிக்கு வீணையுடன் 12 கைகள் வடிவமைத்து இருக்கிறார்கள்.

சிவனின் தொப்புளில் அமர்ந்து இருக்கும் சோடசரஸ்வதி உலகத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது., ஒன்று சேலத்தில் கருங்கல் சிலையாக இருக்கிறது. இரண்டாவது தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, இரும்பு, அலுமினியம் கொண்டு பஞ்சலோகத்தில் வித்தியாசமான சிற்ப சாஸ்திரம் முறையில் செய்யப்பட்ட இந்த சிலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வடிவமைக்கும் போதே ஆன்மீக உணர்வுகளை உணர்ந்ததாக சிற்பிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த பஞ்சலோக சரஸ்வதி சிலை வாலாஜாபாத் அடுத்த ஊத்துகாடு கிராமத்தில் உள்ள விஜயகார்டன் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது. உலகில் இரண்டாவது சிலை என்பதால் ஆர்வமுடன் பார்க்க குவிந்த பக்தர்கள் சிலையை பயபக்தியுடன் வழிபட்டு சென்றனர்.