அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு 8 பேர் உயிரிழப்பு, 42 பேர் காயம்

260 0

2022ம் ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் 140க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அமெரிக்காவில் துப்பாக்கிசூடு வன்முறை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமான நிகழ்வுகளாக மாறி உள்ளன.
இந்நிலையில் சிகாகோ நகரின் தெற்கு கில்பாட்ரிக் பகுதியில் வீடு ஒன்றில் 69 வயது முதியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதேபோல்  பிரைட்டன் பார்க், சவுத் இந்தியானா, நார்த் கெட்ஸி அவென்யூ, ஹம்போல்ட் பார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்  மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 2022ஆம் ஆண்டில் இதுவரை 140க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.