கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 23 ஆவது நாளாகவும் முன்னேடுக்கப்படுகின்றது ,
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று தொழிலாளர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி கறுப்புக் கொடியேற்றி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஜனநாயகம் மற்றும் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து , காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்காவின் உருவச்சிலையின் கண்கள் கறுப்பு நிறத்துணியால் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது .