நாட்டில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேதினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் நாளை மற்றும் எதிர்வரும் 4ஆம் திகதிகளில், A முதல் W வரையான வலயங்களில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி? குறித்த வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை கொழும்பு நகர் பகுதிகளில் குறித்த தினங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையான காலப்பகுதியில் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.