அண்மையில் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் விடயதானங்கள் மற்றும் செயல்பாடுகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிறுவன மற்றும் சட்டக் கட்டமைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, தொழில்நுட்பம், புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், நிதி, நீதி, வெளிநாட்டு அலுவல்கள், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, கல்வி, சுகாதாரம், தொழிலாளர், சுற்றாடல் ஆகிய அமைச்சுக்களை போன்று அதனுடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சுக்களின் விடயதானங்கள் மற்றும் செயல்பாடுகளும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ளது.
மேலும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், காணி, கடற்றொழில், பெருந்தோட்டம் , நீர் வழங்கல், மின்சாரம், எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, இளைஞர் மற்றும் விளையாட்டு, சுற்றுலா, வர்த்தகம், தொழில், ஊடகம், பொது பாதுகாப்பு மற்றும் சமூர்தி அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களினதும் மற்றும்் இராஜாங்க அமைச்சகங்களின் விடயதானங்கள் மற்றும் செயல்பாடுகளும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.