தெற்காசிய சபாநாயகர்கள் மாநாடு – இந்தியாவின் அழைப்பை பாகிஸ்தான் ஏற்க மறுப்பு

300 0

இந்திய அரசு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிப்ரவரி 18, 19ஆம் திகதிகளில்
தெற்காசிய சபாநாயகர்கள் மாநாட்டை நடத்துகிறது.

இதில் கலந்துகொள்ளும்படி இந்திய பாராளுமன்றமும், தெற்காசிய நாடுகளின் பாராளுமன்ற யூனியனும் பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது.

ஆனால் இதில் பங்கேற்க இயலவில்லை என பாகிஸ்தானும், மியான்மரும் கடிதம் எழுதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், பூடான், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2015-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த கொமன்வெல்த் பாராளுமன்ற யூனியன் கூட்டத்தை, ஜம்மு-காஷ்மீர் சபாநாயகருக்கு அழைப்பு அனுப்புவதில்லை என்ற பாகிஸ்தானின் முடிவால் இந்தியா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.