இந்திய மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட் நாளை

253 0

இந்திய மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட் பாராளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்தநிலையில் மத்திய பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு வரம்பு உயருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இன்று நடைபெறும் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார்.

2017-2018-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி நாளை புதன்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

அவர் பட்ஜெட் தாக்கல் செய்வது இது 4வது முறை ஆகும்.