பாகிஸ்தானியர்களுக்கு டிரம்ப் தடை விதிக்க வேண்டும் – இம்ரான் கான்

272 0
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் கிரிக்கட் வீரரும், தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், “அமெரிக்காவிற்கு செல்ல பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தப்பட இருப்பதாக கேள்விப்பட்டேன்.

டிரம்ப் சீக்கிரம் பாகிஸ்தானியர்களுக்கு விசா தடை செய்ய கடவுளை வேண்டுகிறேன். ஏனென்றால், அப்போது தான் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் சொந்த நாட்டை முன்னேற்றுவதற்காக பணியாற்றுவார்கள்.

டிரம்ப் பாகிஸ்தானியர்களுக்கு தடை விதித்தால், நாமும் ஈரான் நாட்டைப்போல அமெரிக்கர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தலைவலித்தால் கூட வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்.

ஆனால், தற்போது பாகிஸ்தானியர்களுக்கு தடை விதிக்கப் போகின்றனர். நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானை முன்னேற்ற விரைந்து செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.