தற்போதைய அரசாங்கம் மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பான மோசடிக்கு உரிய நடவடிக்கையை முன்னெடுப்பதில்லையென ஜே. வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்
மத்திய வங்கி முறி தொடர்பில் விசாரணை குழு நியமிக்கப்பட்டபோதும் அதனால் முழுமையான விசாரணைகள் நடத்த முடியும் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது.
அந்த திருட்டை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை கொடுக்க முடியாவிட்டால், தற்போதைய ஆட்சியாளர்கள் இருந்து பயனில்லை.
அர்ஜூன் மகேந்திரன் பணிநீக்கம் செய்யப்படவில்லை.
அவரின் சேவை நீடிப்பு மாத்திரமே ரத்து செய்யப்பட்டது.
கோப் குழுவில் அங்கத்துவம் வைத்திருந்த ஐக்கிய தேசிய கட்சியினர், மத்திய வங்கியின் முறி விடயத்தில் ஊழல் இடம்பெறவில்லை என்பதை நிரூபிக்கும்முயற்சியில் ஈடுப்பட்டனர்.
எனினும் ஊடகங்கள் மற்றும் தமது கட்சியின் அழுத்தம் காரணமாக அந்த அறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியினர் கையொப்பம் இட்டதாக நலிந்த ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.