மகிந்த ஆட்சியில் மட்டுமல்ல, தற்போதைய ஆட்சியில் ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை – அஜித்

281 0

மகிந்த ஆட்சியில் மட்டுமல்லாது, தற்போதைய ஆட்சியில் ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகவும், சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் வேகம் குறைவாக உள்ளது.

கைது செய்யப்பட்ட ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படுவதில்லை என பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அதனை தாம் ஏற்று கொள்வதாகவும் தெரிவித்த அவர், கடந்த அரசாங்கம் இவ்வாறான ஊழல் வாதிகள் எவரையும் கைது செய்யவும் இல்லை, அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் இல்லை என தெரிவித்தார்.

ஆனால் தற்போதைய முறைமை மாற்றப்பட்டுள்ளது.

தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பதை ஒவ்வொரு அரசியல் வாதிகளும் புரிந்துக்கொண்டுள்தாகவும் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.