மிக் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களது தேசப்பற்று குறித்த உண்மைத் தன்மை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்பார்த்த ஏராளமான விடயங்கள் கிடைக்காது போயுள்ளன.
ஊழல்கள் இடம்பெற்றுள்ள போது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போது சட்டத்துக்கு அமைவாக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இதன்படி மிக் விமான கொள்வனவு குறித்த விசாரணையும் தற்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களது உண்மை முகம்வெளியில் தெரியவரும் என்று ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார்.