முப்படையினருக்கு சகல வளங்களையும் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி

279 0

தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக முப்படையினருக்கு தேவையான சகல வளங்களையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மேற்கொள்ளக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் தாம் எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.