வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு இளையோருக்கு தொழில்வாய்ப்புகளை அதிகரிக்க தமக்கு 3 ஆண்டுகால அவகாசம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் ஆட்சி புரிந்தவர்கள் மக்கள் வழங்கிய ஆணைக் கொண்டு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை.
தற்போது தங்களுக்கு 3 ஆண்டு கால அவகாசம் வழங்கினால், பல்வேறு முதலீடுகளைக் கொண்டு இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.