வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் வைத்திய விடுதி திறந்து வைக்கப்பட்டது

291 0

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதியினை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று  உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.

சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு அமைச்சரின் மாகாண அபிவிருத்தி நிதியின் கீழ் 9 மில்லியன் ரூபாய் செலவில் இவ் வைத்தியசாலை விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வைத்தியசாலை திண்மக்கழிவுகளை சேகரிக்கும் கழிவு தொட்டி உள்ளடங்கிய கட்டிடத்தொகுதி ஒன்றும் 1.2 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு இதன் போது திறந்து வைக்கப்பட்டது.