வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம்

327 0

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நினைவு தினம் இன்று காலை மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்த நினைவு தின நிகழ்வு வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் ஏ.தேவதாஸின் தலைமையிலும், வடமாகாணசபை உறுப்பினரான சி.தவராசாவின் அனுசரனையிலும் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வின் போது வட்டக்கண்டல் கிராமத்தில் கடந்த 30.01.1985 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், சர்வமதத் தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.

மேலும், நினைவேந்தல் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.