வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 90 ஆயிரம் கிலோ கிராம் விதை உளுந்தினை கொள்வனவு செய்துள்ளதாக விதை நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலைய பிரதி விவசாயப்பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விதை உழுந்து கொள்வனவு தொடர்பாகக் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
”வவுனியா மாவட்டமானது உளுந்து செய்கையினை அதிகளவில் மேற்கொள்ளப்படும் மாவட்டமாகும்.கடந்த போகத்தில் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 5247 ஹக்டயர் வரை உளுந்துச்செய்கை விவசாயிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் 90 ஆயிரம் கிலோ விதை உளுந்தினை எமது நிலையத்தின் ஊடாக விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்குரிய நிதியினை கட்டம் கட்டமாக விவசாயிகளிற்கு வழங்கி வருகின்றோம்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.