மேலும் 20 எம்.பிக்கள் சுயாதீனமாக செயல்பட முடிவு: பெரும்பான்மையை இழக்கிறது அரசாங்கம்

275 0

ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக இயங்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள இடைக்கால பிரேரணை நிராகரிக்கப்பட்டால், இவர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) 10 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது இடைக்கால அரசாங்க முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் மொத்த எண்ணிக்கை 20ஐ நெருங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது