மட்டு வந்தாறுமூலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

165 0

ஏறாவூர் பொலிஸ் பிரிவுலிலுள்ள வந்தாறுமுலை பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியை மேற்கோண்டுவந்த வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (21) நள்ளிரவு  கைது செய்துள்ளனர்.

இதன்போது. 10 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு 42 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டு ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகார் தெரிவித்தார்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று நள்ளிரவு வந்தாறு முலையிலுள்ள குறித்த வீட்டை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகார் தலைமையிலான பொலிசார் முற்றுகையிட்டனர்.

இதன் போது வீட்டின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவரை கைது செய்ததுடன் அங்கிருந்து 10 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு, 42 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் மற்றும் மீட்கப்பட்ட கசிப்பு மற்றும் சான்று பொருட்களுடன் ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.