நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராக விஜித பேருகொட நியமனம்

142 0

நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராக இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான விஜித பேருகொட இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில். துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை இராஜாங்க அமைச்சராக விஜித பேருகொட இந்த வார தொடக்கத்தில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

17 புதிய அமைச்சரவை அமைச்சர்களையும் 24 புதிய இராஜாங்க அமைச்சர்களையும் ஜனாதிபதி கடந்த திங்கட்கிழமை (18) நியமித்ததோடு, தொடர்ந்து மேலும் நான்கு இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியினால் புதன்கிழமை மீண்டும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.