சென்னையில் 7 சாலைகளை நவீனமயமாக்க திட்டம்- தமிழக நெடுஞ்சாலை துறை முடிவு

195 0

ஜி.எஸ்.டி. சாலை, ஜி.டபிள்யூ.டி. ரோடு, ஜி.என்.டி. சாலை, இன்னர் ரிங் ரோடு, வேளச்சேரி பைபாஸ் ரோடு, மர்மலாங் பாலம்- இரும்புலியூர் சாலை, மவுண்ட் பூந்தமல்லி – ஆவடி சாலை ஆகிய 7 சாலைகள் ஸ்மார்ட் ரோடுகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள 7 சாலைகளை ஸ்மார்ட் ரோடுகளாக மாற்ற தமிழக நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து உள்ளது.ஜி.எஸ்.டி. சாலை, ஜி.டபிள்யூ.டி. ரோடு, ஜி.என்.டி. சாலை, இன்னர் ரிங் ரோடு, வேளச்சேரி பைபாஸ் ரோடு, மர்மலாங் பாலம்- இரும்புலியூர் சாலை, மவுண்ட் பூந்தமல்லி – ஆவடி சாலை ஆகிய 7 சாலைகள் ஸ்மார்ட் ரோடுகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 108.5 கிலோ மீட்டர் தூர சாலைகள் நவீனமயமாக்கப்படுகிறது.

வைபை கம்பங்கள், சி.சி.டி.வி. கேமராக்கள், டிஜிட்டல் தகவல் பலகை மற்றும் போக்குவரத்தை சிறப்பாக நிர்வகிக்க தேவையான பிற வசதிகளும் இந்த மேம்படுத்த நவீன சாலைகளில் இடம் பெறும்.

மேலும் வாகனங்களின் சராசரி வேகம் 50 கிலோ மீட்டருக்கு மிகாமல் இருக்க பல்வேறு சீர்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெறும்.

பாதசாரிகள் நடப்பதற்கான தரை மேம்பாலம், சுரங்க பாதை வசதிகள், புதிய பஸ் நிறுத்தங்களும் இந்த ஸ்மார்ட் ரோடுகளில் அமைக்கப்படும்.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.