அமெரிக்காவின் தடைக்கு பிரித்தானியா எதிர்ப்பு

303 0

முஸ்லிம் நாடுகளின் அகதிகள் மீதான அமெரிக்காவின் தடைக்கு பிரித்தானியா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே யை மேற்கோள்காட்டி சர்வசே ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த செயற்பாட்டிற்கு தெரேசா மே தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் இந்த புதிய சட்டமானது பிரித்தானிய பிரஜைகளை பாதிக்கும்பட்சத்தில் அதற்கு எதிரான மேன்முறையீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரித்தானியா எச்சரித்துள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சுமார் ஏழு நாடுகளின் அகதிகளுக்கு நான்கு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த நாட்டு பிரஜைகளின் அகதி அந்தஸ்த்து விண்ணப்பங்களும் இரத்துசெய்யப்பட்டுள்ளன.

ஈராக், ஈரான், சிரியா, லிபியா, சூடான் மற்றும் யெமன் ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தீவிரவதாத்தை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் அதிருப்தியை வெளியிட்டுவருகின்றன.