உலகில் ஊழல் மிகுந்த நாடாக இலங்கை பெயரிட்டுள்ளது – ஒன்றிணைந்த எதிர்கட்சி கவலை

250 0

அதிக கடன் சுமை காரணமாக நாட்டை பாதிக்கும் உடன்படிக்கைகளினூடாக வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்;திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் நிறுவனம் உலகில் ஊழல் மிகுந்த நாடாக இலங்கையை பெயரிட்டுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

பட்டினியில் தவிக்கும் நாடுகளின் பட்டியலிலும் இலங்கை 84 ஆம் இடத்தில் உள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஆய்வுகளுக்கு அமைய அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சிகள் தோல்வியடைந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.