கவர்னர் கார் மீது தாக்குதல்: ஜி.கே.வாசன்-என்.ஆர்.தனபாலன் கண்டனம்

210 0

மயிலாடுதுறை அருகே தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்ற கார் தாக்கப்பட்டதற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழக கவர்னர் மயிலாடு துறை மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் மேற் கொண்ட போது நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஏற்புடையதல்ல. தமிழக அரசு இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
தமிழக கவர்னர் சென்ற வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.ஆர்.தனபாலன்
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்ற கார் மீது மயிலாடுதுறையில் மன்னம் பந்தல் என்னும் இடத்தில் சில சமூக விரோதிகள் கற்களையும், கருப்பு கொடி கட்டிய கம்பங்களையும் வீசி தாக்குதல் நடத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
இதுபோன்ற ஜனநாயகத் திற்கு எதிரான சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.