காலிமுகத்திடல் போராட்டத்தில் களமிறங்கிய சனத் ஜெயசூரிய

174 0

காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராகவும் கடந்த வாரம் தொடக்கம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

இதேவேளை, காலிமுகத்திடலில் போராட்டம் இடம்பெறும் பகுதியில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத், 24 மணிநேர சத்தியாகிரக போராட்டத்தை   ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.